இலங்கை அணி வீரர்களுக்கு புதிய தடை !

Saturday, August 19th, 2017

 

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஓய்வு அறைக்குள் பிஸ்கட்டுகள் கொண்டு வந்து உண்பதை இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் தடை செய்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தடையை அறிந்த வீரர்கள், இலங்கை அணியின் மேலாளர் அசங்க குருசிங்காவிடம் விளக்கம் கேட்டு உள்ளதாக தெரிகிறது. அதற்கு குரு சின்கா வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன

இதுகுறித்து விளக்கம் அளித்து பேசிய அசங்க குருசிங்க, வீரர்களுடன் அவ்வாறான வாக்குவாதம் ஏதும் நடைபெறவில்லை. ஆனால் எங்களது அணியில் உள்ள உடல் தகுதி பயிற்சியாளர் வீரர்கள் பிஸ்கட் உண்பதை விரும்பவில்லை.

அதனால் வீரர்களின் உடை மாற்றும் அறையில் பிஸ்கட்டை எடுத்து போக கூடாது என அறிவுறுத்தி உள்ளார். மேலும் நாங்கள் உணவு வழங்கும் குழுவிடம் இதைப் பற்றி கூறினோம், அதற்கு அவர்கள் வாக்குவாதம் ஏதும் செய்யாமல் ஒத்துழைத்தனர்

இதனால் வீரர்களுக்கும் அணி மேலாண்மை நிர்வாகிகளுக்கும் எவ்வித வாக்குவாதங்களும் மனக் சங்கடங்களும் ஏற்படவில்லை. இதுபோன்ற வதந்திகள் பரவிய போது வீரர்கள் என்னை அழைத்து நாங்கள் முழு பங்களிப்புடன் ஒத்துழைப்பதாக எங்களுக்கு உறுதியளித்தனர். சொல்லப்போனால் வீரர்களுக்கு அவர்களின் அறையில் பிஸ்கட் இருந்தது கூட தெரியாது என தெரிவித்துள்ளார்.

Related posts: