சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கைல் அபோர்ட் ஓய்வு!

Saturday, January 7th, 2017

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் அபோர்ட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்துடனான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தான் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இங்கிலாந்தின் பிராந்திய கழகமான ஹம்செயார் பிராந்தியத்திற்காக தான் விளையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கைல் அபோர்ட் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 05 விக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு பாரிய பங்காற்றியிருந்தார்.

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தனது ஓய்வை கைல் அபோர்ட் அறிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், கைல் அபோர்ட்டின் இந்த தீர்மானத்தை மதிப்பதாகவும் அவருக்குப் பதிலாக இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ட்வைன் ஒலிவர் என்ற அறிமுக வீரர் இணைக்கப்பட்டுள்ளார் எனவும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

11 டெஸ்ட் போட்டிகளில் 39 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள கைல் அபோர்ட், 28 ஒருநாள் போட்டிகளில் 34 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு ஆரம்பமான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கைல் அபோர்ட், இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலேயே தனது ஓய்வை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

abbot

Related posts: