சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முதல் பெண் செயலாளர்!
Saturday, May 14th, 2016
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன வரலாற்றில் முதலாவது பெண் பொதுச் செயலாளர் நியமனம் பெற்றுள்ளார்.
செனகலை சேர்ந்த Fatma Samba Diouf Samoura என்பவரே இந்த பதவிக்கு தெரிவாகியுள்ளார். முன்னாள் செயலாளர் நாயகம் Jerome Valcke, 12 வருட காலத்துக்கு கால்பந்தாட்ட நடவடிக்கைகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே சமோராவின் நியமனம் இடம்பெற்றுள்ளது.
51 வயதான சமோரா 21 வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றியுள்ளார். இந்தநிலையில் எதிர்வரும் ஜூன் முதல் கால்பந்தாட்ட சம்மேளன கடமைகளை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
Related posts:
இலங்கை - வங்களாதேஷ் தொடருக்கான வங்க அணி விவரம் வெளியீடு!
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை – பாகிஸ்தான்!
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் நேபாள அணி உலக சாதனை!
|
|
|


