சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரநிலை – 121 புள்ளிகளுடன் மீண்டும் அஸ்திரேலியா முதலிடம்!
Monday, September 11th, 2023
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை வெளியிட்டுள்ளது. இதன்படி அஸ்திரேலியா 121 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளையும் வெற்றிகொண்டதை தொடர்ந்து அஸ்திரேலியா அணி இவ்வாறு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் அணி 2ஆவது இடத்திலும், இந்தியா அணி 3ஆவது இடத்திலும், நியூசிலாந்து அணி 4ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பட்டியலில் இலங்கை அணி 08 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
I.P.L தொடர்: அதிக விலைக்கு போனவர்கள் விபரம்!
அதிரடிகாட்டி அதிர வைத்த கெயில்!
ரஸல் இல்லை: நம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் !
|
|
|


