சம்பியனானது ஸ்ரீ சண்முக இந்து மகளிர்!
Tuesday, August 2nd, 2016
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடத்திய 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வலைப்பந்து போட்டியில் திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி அணியினர் சம்பியனாகினர்.
அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டியானது அண்மையில் நடைபெற்றிருந்ததுடன், இதில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் இருந்தும் அணிகள் பங்கு கொண்டிருந்தன.
இறுதிப் போட்டியில், ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியும் அம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா விளையாட்டு பாடசாலை அணியும் மோதியிருந்த நிலையில், இரண்டு அணிகளும் தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தன. ஈற்றில் சண்முக இந்து மகளிர் கல்லூரி 24 புள்ளிகளுக்கு 18 புள்ளிகள் என்ற கணக்கில் டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரியை தோற்கடித்திருந்தது.
Related posts:
ஹேரத் ஒரு துப்பாக்கி - எச்சரிக்கும் மைக் ஹசி!
முத்தரப்பு கிரிக்கெட்: முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வெற்றி!
உங்களால் முடியாது - உலகக் கோப்பை கிரிக்கெற் தொடர்பீல் பீட்டர்சன்!
|
|
|


