சமபோஷா கிண்ண உதைப்பந்தாட்டம் சென்.ஹென்றியரசர் கல்லூரி வெற்றி!

Saturday, November 5th, 2016

சமபோஷா கிண்ணத்திற்காக இடம்பெற்று வரும் 15 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான தேசியமட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் இளவாலை சென்.ஹென்றியரசர் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

சமபோஷா கிண்ணத்திற்கான 15 வயது ஆண்களிற்கான போட்டிகள் நேற்று வென்னக்குவ ஜோசப்வாஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. இதில் சென்.ஹென்றியரசர் கல்லூரி அணியை எதிர்த்து ராகுல கல்லூரி அணி மோதியது. இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் சென்.ஹென்றியரசர் கல்லூரி அணி வீரர் டிசாந் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கோலாக்கினார்.

ஆனால் சில நிமிடங்களில் சென்.ஹென்றியரசர் கல்லூரி அணியினர் முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த ராகுல கல்லுரி அணிக்கு தண்டனை உதை கிடைத்தது. அதனைச் சரியாக பயன்படுத்தி கோலாக்கினாhர். அடுத்த நிமிடத்தில் சென்.ஹென்றியரசர் கல்லூரி அணி வீரர் நோட்டன் ஒரு கோலைப் போட இடைவேளைக்கு முன்னர் சென்.ஹென்றியரசர் கல்லூரி அணி 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இடைவேளையின் பின்னரான ஆட்டம் ஆரம்பமானதும் ராகுல கல்லூரி அணி ஒரு கோலைப் போட்டு பதிலடி கொடுத்தனர். சற்றும் சளைக்காத சென்.ஹென்றியரசர் கல்லூரி அணி வீரர் ஜெயலக்சன் இரு கோல்களைப் போட்டு அசத்தினார். ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் இருக்கும்போது ராகுல கல்லூரி அணி வீரர் ஒரு கோலைப் போட ஆட்ட நேர முடிவில் இளவாலை சென்.ஹென்றியரசர் கல்லூரி அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

image_update_9e81e248217c7cfc_1351688061_9j-4aaqsk

Related posts: