சடுகதியில் உயரும் கிரிக்கெட் வீரர்கள் சம்பளம்!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் சுமார் 6 மடங்குவரை உயர வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தும் படி அணித்தலைவர் கோஹ்லி, டோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ.யின் நிர்வாக அதிகாரி விநோத் ராயை டெல்லியில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.அல்லது அவுஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான சம்பளமாவது வழங்கும் படி கேட்டுக்கொண்டனர்.
தற்போதைய 2017-17 ஒப்பந்தத்தின் படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றனர்.அதன்படி கிரேடு ‘ஏ’ வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடியும், கிரேடு ‘பி’ வீரர்களுக்கு ரூ.1 கோடியும், கிரேடு ‘சி’ வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் ஆண்டுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.ஆனால் புதிய ஒப்பந்தத்தின் படி கிரேடு ‘ஏ’ வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12 கோடியும், கிரேடு ‘பி’ வீரர்களுக்கு ரூ.8 கோடியும், கிரேடு ‘சி’ வீரர்களுக்கு ரூ.4 கோடியும் ஆண்டுக்கு சம்பளமாக வழங்கப்படலாம் என தெரிகிறது.அணித்தலைவருக்கு ரூ.12 கோடிக்கு அதிகமாக சம்பளம் கிடைக்கும் என்றும் பிசிசிஐ.,வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|