சங்கக்காராவின் சாதனையை தாண்டுவாரா குஷால் மெண்டிஸ்!
Friday, July 29th, 2016
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்துள்ள குஷால் மெண்டிஸ் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் சாதனையை நெருங்கி வருகிறார்.
பல்லேகெல மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். தற்போது அவர் 169 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர்களில் 2வது இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா இருக்கிறார். அவர் 2007ல் ஹொபர்ட்டில் நடந்த போட்டியில் 192 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.இன்று குஷால் மெண்டிஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் குமார் சங்கக்காராவின் சாதனையை அவர் எளிதாக முறியடிப்பார்
Related posts:
“சி” பிரிவு பெண்களுக்கான எறிபந்தாட்டம் இளவாலை கன்னியர்மடம் ம.வி.சம்பியன்!
முச்சதம் எடுத்த கருண் நாயர்!
அணியை பலப்படுத்த சங்கா,மஹேலவுக்கு அழைப்பு!
|
|
|


