கிறிஸ் கெயில் அதிரடி: ஜமைக்கா டவல்ஸ் அபார வெற்றி!
Tuesday, July 5th, 2016
கரிபியன் பிரிமியர் லீக் போட்டியில் நேற்று இடம்பெற்ற போட்டியில் அதிரடி வீரர் கிரிஸ் கெயில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 54 பந்துகளில் 108 ஓட்டங்களை பெற்றார்.
11 ஆறு ஓட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாகவே இவர் இந்த சதத்தினை பெற்றுள்ளார்.
கரிபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஜமைக்கா டவல்ஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் அணி மோதிய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 191 ஓட்டங்களை பெற்றது.
192 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா டவல்ஸ் அணியினர் 10 பந்துகள் மீதமிருக்க 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணித்தலைவர் கெயில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தமை போட்டியின் சிறப்பம்சமாகும்.
ஐமைக்கா அணியின் விக்கட் காப்பாளரான குமார் சங்கக்கார நைட் ரைடர்ஸ் அணியின் மூன்று விக்கட்டுக்களை வீழ்த்துவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்த நிலையில் , அவர் இப்போட்டியில் 20 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


