கிரிக்கெட் விளையாட்டில் சிவப்பு அட்டை: எதற்காக தெரியுமா?
Friday, December 9th, 2016
கால்பந்து விளைாயட்டு போல் கிரிக்கெட் போட்டியின் போது களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரருக்கு சிவப்பு அட்டை காட்டும் முறையை நடைமுறைப்படுத்த எம்.சி.சி பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி போட்டியின் போது களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்படும்.
இலண்டனில் உள்ளது மெர்லிபோர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) கிரிக்கெட் போட்டியில் களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரருக்கு சிவப்பு அட்டை காட்டும் முறையை கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரையை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டால், அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் புதிய விதி, அமுல்படுத்தப்படும். இதேபோல் ‘துடுப்பு மட்டை’ அளவு குறித்தும் யோசனையையும் தெரிவித்துள்ளது

Related posts:
இந்திய அணியை செப்பேல் அணியாக மாற்ற நினைத்தார் அவர் - சௌரவ் கங்குலி
பாதுகாப்பு குறித்து ஏமாற்றம் - சம்மி சில்வா !
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி
|
|
|


