கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரமிற்கு பிடியாணை!
Thursday, January 12th, 2017
31 தடவைகள் வழக்கு விசாரணைகளில் பிரசன்னமாகாமையால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரமிற்கு எதிராக, கராச்சியில் உள்ள நீதிமன்றம் ஒன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கராச்சியில் அக்ரமின் வாகனம் ஒன்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்துடன் மோதியது.
இதன்போது குறித்த இராணுவ அதிகாரி, அக்ரமின் வாகனத்தின் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்தினார்.
இது தொடர்பில் அக்ரம் வழக்கு தொடர்ந்திருந்த போதும், கடந்த 31 தடவை வழக்கு விசாரணைகளில்அவர் பிரசன்னமாகி இருக்கவில்லை. இந்நிலையிலேயே அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு எதிர்வரும் 17ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related posts:
இதற்கெல்லாம் மெஸ்சி தான் காரணம் -நெய்மரின் தந்தை!
இந்திய அவுஸ்திரேலிய தொடர் உறுதி- சௌரவ் கங்குலி
ஆப்கானிய பெண்கள் விளையாட்டிலிருந்து விலக்கப்பட்டால் அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியை இரத்து செய்யும்!
|
|
|


