கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்பது யார்?

Monday, October 30th, 2017

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவும் அவர்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்த விளையாட்டுக் கழக அதிகாரிகளுமே இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது அநேகமானவர்களின் கருத்தாகும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி தொடர்பான ஆராய்வு௪..

இலங்கை கிரிக்கெட் அணி இவ்வருடத்தில் மாத்திரம் 03 தொடர்களில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது.

இந்த வருடம் 26 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி அவற்றில் 12 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது.

அதிலும் சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் தோல்வியடைந்தமை கவனித்திற் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இவ்வருடம் 11 போட்டிகளில் மாத்திரமே இலங்கை அணியால் வெற்றி பெற முடிந்தது.

10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 06 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதுடன் , ஒரு போட்டியையேனும் வெற்றி தோல்வியற்ற நிலையில் முடித்துக் கொள்ள முடியவில்லை.

11 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி அவற்றில் 06 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால் , லசித் மலிங்க ,சாமர கபுகெதர ,உபுல் தரங்க , உள்ளிட்டோர் போட்டிகளில் இலங்கை அணியை வழி நடத்தியுள்ளதோடு , சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவுக்குழுவும் அண்மையில் இராஜினாமா செய்தது.

இந்தக்காலப்பகுதிக்குள் வீரர்கள் தொடர்ச்சியாக உபாதைக்குள்ளானதுடன் , 45 வீரர்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

திறமையான பல வீரர்கள் அணியில் இடம்பெறுகின்ற போதிலும் பொறுப்பற்ற நிர்வாகம் காரணமாகவே தோல்வியடைய நேர்வதாக பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

1995 ஆம் ஆண்டு முதல் 18 பேர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவியை வகித்துள்ளனர்.

  1. ஆனந்த ராஜசிங்க புஞ்சி ஹேவா 1995 ௲ 1996
  2. உபாலி தர்மதாச ௲ 1996 ௲ 1998
  3. திலங்க சுமதிபால 1998 1999
  4. ரியன்சி விஜேதிலக்க 1999 ௲ 2000
  5. திலங்க சுமதிபால 2000 ௲ 2001
  6. விஜய மலலசேகர 2001- 2002
  7. ஹேமக அமரசூரிய 2002 ௲ 2003
  8. திலங்க சுமதிபால 2003 ௲ 2004
  9. மொஹான் டி சில்வா 2004 ௲ 2005
  10. ஜயந்த தர்மதாச 2005 ௲ 2007
  11. அர்ஜுன ரணதுங்க ௲ 2008
  12. எஸ்.லியனகம ௲ 2008 ௲ 2009

13.சோமசந்திர டி சில்வா ௲ 2009 -2011

  1. உபாலி தர்மதாச 2011 ௲ 2012
  2. ஜயந்த தர்மதாச 2013 -2015
  3. சிதத் வெத்தமுனி 2015 ௲ 2016
  4. திலங்க சுமதிபால 2016

1998 ஆம் ஆண்டு முதற்தடவையாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவராக பதவியேற்ற திலங்க சுமதிபால , நான்கு தடவைகள் அந்த பதவியை வகித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் திலங்க சுமதிபாலவுடன் இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்றுக் கொடுத்த முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க போட்டியிட்டிருந்தார்.

தேர்தலில் திலங்க சுமதிபால 121 வாக்குகளை பெற்றதோடு , அர்ஜூன ரணதுங்கவுக்கு 07 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தன.

எஸ்.எஸ்.எஸ்.சி கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அர்ஜூன ரணதுங்கவுக்கு தமது கழகத்தின் வாக்கு கூட கிடைத்திருக்கவில்லை.

கடந்த தேர்தல்களின்போது அரசியல்வாதிகளின் பணத்திற்கு ஏமாறாது மக்கள் வாக்குகளை பயன்படுத்தியிருந்தனர்.

சில அரசியல்வாதிகள் வாக்குகளை பெறுவதற்காக அதிக பணத்தை செலவிட்டாலும் அவர்களால் வெற்றிபெற முடியாமற்போனது.

மக்கள் விலைபோகாமையே இதற்கு காரணமாகும்.

எனினும் இலங்கையின் கிரிக்கெட் நிர்வாகம் இன்னமும் பணத்திற்கு அடிமையாகியுள்ளது.

பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மக்களிடமிருந்தேனும் பாடத்தை கற்று, பணத்திற்கு அடிமையாவதை விடுத்து இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது.

குடும்ப அரசியல் மற்றும் தகுதியற்றவர்கள் , பண பலம் படைத்தவர்களிடமிருந்து கிரிக்கெட் விளையாட்டை மீட்டு தொழில்சார் ரீதியில் கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டிய சூழலை உருவாக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையல்லவா?

Related posts: