டுமினி புதிய சாதனை!

Saturday, January 20th, 2018

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜேபி டுமினி ஒரு ஓவரில்  37 ஓட்டங்கள் எடுத்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் முதல் தர போட்டியில் கேக் கோப்ராஸ் அணிக்காக டுமினி விளையாடி வருகிறார். இதில் நைட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 240 ஓட்டங்களை இலக்க கொண்டு கேப் கோப்ராஸ் அணி துடுப்பெடுத்தாடியது.

கோப்ராஸ் அணிக்காக  களம் இறங்கிய டுமினி ஆட்டத்தின் 36-வது ஓவரில் இடது கை  பந்து  வீச்சாளர் எடி லெயி பந்து வீச்சை புரட்டி எடுத்தார். முதல் நான்கு பந்துகளை சிக்சருக்கு விளாசினார்.

ஐந்தாவது பந்தில்  இரண்டு ஓட்டங்களை எடுத்தார்.ஆறாவது பந்தில் நான்கு ஓட்டங்களை விளாசினார். குறித்த பந்து முறையற்ற பந்து என நடுவர் அறிவித்தார்.இதையடுத்து மீண்டும் 6 வது பந்து வீசப்பட்ட நிலையில் அதிலும் ஆறு ஓட்டங்களை விளாசி தள்ளினார்.

இதன் மூலம் ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் பெற்று உள்ளூர் போட்டி வரலாற்றில் டுமினி புதிய சாதனை படைத்துள்ளார். டுமினி மொத்தமாக 37 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்று  கோப்ராஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்.

Related posts: