கிண்ணத்தை வென்றது மட்டக்களப்பு அணி!

29 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணி, கபடி சுற்றுத்தொடரில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
அனுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டு கட்டடத்தொகுதியில் நடைபெறும் இச்சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றது.
காலி கபடி ஆண்கள் அணிக்கும் மட்டக்களப்பு கபடி ஆண்கள் அணிக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிசுற்றில் 31 – 43 என்ற புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றிபெற்றுள்ளது.
மேலும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எம்.நிப்ராஸ் முதலிடம் பெற்றுள்ளார்.
அனுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டு கட்டட தொகுதியில் நேற்று முன்தினம் ஆரம்பமான 29 தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் சகல மாவட்டங்களையும் சேர்ந்த மூவாயிரத்திற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|