கிண்ணத்தை வென்றது கலைமகள் !

நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் அரியாலை கலைமகள் அணி கிண்ணம் வென்றது.
கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் அண்மையில் இந்த இறுதியாட்டம் இடம்பெற்றது. அரியாலை கலைமகள் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து மணியந்தோட்டம் ஐக்கிய விளையாட்டுக் கழகம் மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடி அரியாலை கலைமகள் விளையாட்டுக்கழக அணி 5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 2 இலக்குகளை இழந்து 34 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மணியந்தோட்டம் ஐக்கிய விளையாட்டுக்கழகம் 5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 2 இலக்குகளை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றதை அடுத்து 2 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது கலை மகள் அணி.
Related posts:
சப்பலின் கருத்துக்கு மிஸ்பா கொடுத்த பதிலடி!
வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் நீக்கம்!
ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா!
|
|