சப்பலின் கருத்துக்கு மிஸ்பா கொடுத்த பதிலடி!

Tuesday, January 17th, 2017

பாகிஸ்தான் அணியையும் அதன் தலைவரான மிஸ்பாவையும் பற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் இயன் சப்பல் விமர்சனம் செய்திருந்த நிலையில் அக் கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்தார் மிஸ்பா உல்ஹக்.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் முடிவடைந்தது. ஆஸ்திரேலியா 3:0 என்ற அடிப்படையில் தொடரை வென்றது. இதனால் சரியாக விளையாடாத பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வந்து விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை அழைப்பு விடுக்கக்கூடாது. அவர்கள் சொந்த மைதானத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பின் அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் இயன் சப்பல் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கே மிஸ்பா பதிலடி கொடுத்தார் சப்பலின் விமர்சனங்கள் எல்லாம் தேவையில்லாதது. அதேபோல் நன்றாக கிரிக்கெட் விளையாடி, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் மிகுந்த அனுபவம் உடைய முன்னாள் வீரரின் தகுதிக்கேற்ற விமர்சனமாக இது இல்லை. ஆஸ்திரேலியா இலங்கை மண்ணில் 0:3 என தோல்வியடைந்தது. இலங்கை அணியில் ஜாம்பவானாக இருந்த மகேல, சங்கா போன்ற வீரர்கள் இல்லை. 10 டெஸ்டிற்கும் குறைவாக விளையாடிய வீரர்களே அதிக அளவில் இருந்தனர். அவர்களிடம் படுதோல்லியடைந்தது. தென்னாபிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் தொடரை 0:5 என இழந்தது. அதற்கு முன் நாங்கள் ஜக்கிய அரபு இராச்சியத்திலும், இந்தியா தனது சொந்த மண்ணிலும் ஆஸ்திரேலியாவை வழித்துத் துடைத்தோம். இதனால் அவர்கள் கட்டாயம் எங்கள் இடத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என மிஸ்பா தெரிவித்தார்.

Vethanayakan

Related posts: