கிண்ணத்தை வென்றது இமையாணன் மத்தி!

தம்பசிட்டி ஞானவைரவர் விளையாட்டுக்கழகம் நடத்திய கரப்பந்தாட்டத்தில் இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் சம்பியனானது. ஞானவைரவர் விளையாட்டுக்கழகத்தின் கரப்பந்தாட்ட திடலில் நேற்று முன்தினம் இந்த இறுதியாட்டம் நடைபெற்றது. இமையாணன் மத்திய வி.கழகத்தை எதிர்த்து மந்திகை யூ.கே விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் அபாரமாக விளையாடிய இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் 30:15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானது.
Related posts:
வர்ணனையாளராகும் சங்கக்கார!
உடற்தகுதி சோதனையில் அஞ்சலோ மெத்தீவ்ஸ் சித்தி!
இலங்கை பயிற்சியாளர் ஹத்ருசிங்கா வேதனை!
|
|