தொடரை வென்றது  நியூசிலாந்து!

Wednesday, January 25th, 2017

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இதில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 289 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி மழையால் பாதிக்கப்பட்ட 2-வது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை பெற்றது. கனமழை காரணமாக 3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 92.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இலந்து 354 ஓட்டங்களை குவித்தது.

அதிகபட்சமாக நிகோல்ஸ் 98 ஓட்டங்களை சேர்த்தார். வங்கதேச அணி சார்பில் ஷகிப் அல்-ஹசன் 4 விக்கெட்டும், மெக்தி ஹசன் மிராஸ், கம்ருல் இஸ்லாம் ரபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

2-வது இன்னிசில் பங்களாதேஷ் அணி, நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 52.5 ஓவர்களில் 173 ஓட்டங்களுடன் சுருண்டது. அதிகபட்சமாக மக்முதுல்லா 38 ஓட்டங்களையும் , சவ்மியா சர்கார் 36 ஓட்டங்களையும் எடுத்தனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், கிரான்ட்ஹோம் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 109 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்து, 9 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் ஜீத் ராவல் 33 ஓட்டங்களையும், டாம் லாதம் 41 ஓட்டங்களையும், கிரான்ட்ஹோம் 33 ஓட்டங்களையும் எடுத்தனர்.நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரையும் நியூசிலாந்து அணி தனதாக்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: