கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே அதிரடி அறிவிப்பு!

Tuesday, May 14th, 2024

பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே .கிளப் போட்டிகளில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாரிஸ் செயின்ட் – ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.

அதன்படி நீண்ட காலமாக பி.எஸ்.ஜி கிளப் அணிக்காக விளையாடி வரும் எம்பாப்வே ரியல் மாட்ரிட் கிளப் அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 போட்டியுடன் பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேற இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் எம்பாப்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அந்தவகையில் பிரான்ஸ் நாட்டில் சிறந்த கிளப் அணியின் வீரராக பல ஆண்டுகள் நான் இருந்தது எனக்கு பெருமை. என்றும் உலகின் மிகச் சிறந்த கிளப் அணிகளில் ஒன்று பி.எஸ்.ஜி எனக்கு புதிய சவால் தேவை என கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: