கல்வித் திணைக்களதொடர்: கோட்டைகட்டிய குளம் அ.த.க எறிபந்தில் மகுடம்!

Thursday, June 7th, 2018

வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான எறிபந்தாட்டத்தில் 17 வயது ஆண்கள் பிரிவில் துணுக்காய் கோட்டைகட்டிய குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அணி கிண்ணம் வென்றது. எறிபந்தாட்டத்தில் அந்தப் பாடசாலை அணிக்குக்கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று இந்த இறுதியாட்டம் நடைபெற்றது. துணுக்காய் கோட்டைகட்டிய குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது.

முதலாவது செற்றில் ஆதிக்கம் செலுத்திய கோட்டைகட்டிய குளம் அரிசனர் தமிழ்க் கலவன் பாடசாலை அணி 25:17 என்ற புள்ளிகளின் அடிப்படையில் அந்த செற்றைக் கைப்பற்றியது. இரண்டாவது செற்றில் தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 25:22 என்ற புள்ளிகளின் அடிப்படையில் பதிலடி கொடுத்தது.

இதனால் வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் மூன்றாவது செற்றில் கோட்டைகட்டிய குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அணி மீண்டும் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி 25:16 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. மூன்றாமிடத்தை தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி பெற்றது.

Related posts: