இந்தியாவிடம் அடங்கியது நியூசிலாந்து !

Monday, October 17th, 2016

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான பந்து வீச்சு கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெற்றுக்களால் வெற்றியீட்டியது

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்கள் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. இதில் டோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இப்போட்டியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இந்திய விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினம் என கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு பதிலாக பாண்டியா மற்றும் கீதர் ஜாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற்றிருந்தனர்.

இதனால் இந்திய அணிக்கு ஆரம்ப பந்து வீச்சாளராக யாதவ், பாண்டியா ஆகியோரை பந்து வீசுமாறு டோனி அழைத்தார். அது போலவே பாண்டியாவின் பந்து வீச்சில் தடுமாறிய நியூசிலாந்து அணி ஆரம்ப ஆட்டக்காரர் 12 ஓட்டங்களில் கப்டில், அணித்தலைவர் வில்லியம்ஸன்(3), டெய்லர்(0) ஆகியோரை யாதவ் வெளியேற்றினார். அஸ்வின் இல்லாத குறையை பாண்டியா நீக்கியது போல தனது அடுத்தடுத்த ஓவரில் ஆண்டர்சன் (4), ரோன்சி (0) என இருவரையும் வீழ்த்தினார்.

நிச்சீம்(10), சாண்டீர் (0) ஆகியோர் ஜாதவ் ஓவரிலும், பிரஸ்வெல்(15), சவுத்தி(55), சோதி(1) ஆகியோர் மிஸ்ரா ஓவரிலும் வீழ்ந்தனர்.துவக்க ஆட்டக்காரர் லாதம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்கள் குவித்தார். நியூசிலாந்து அணி இறுதியாக 43.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் பாண்டியா மற்றும் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 191 ஓட்டங்கள் இலக்குடன் இந்திய அணி தற்போது விளையாடியது. இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், ரகானேவும் துவக்கம் தந்தனர்.

வந்த வேகத்தில் இருவரும் அதிரடி காட்ட ஆரம்பித்தனர். இதனால் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ஓட்டங்களில் வெளியேற, ரஹானே 33 ஓட்டங்களில் வெளியேறினார்.அடுத்து வந்த கோஹ்லி ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார். அதிரடியை தொடங்கிய விராட் கோஹ்லி அரைசதத்தை பூர்த்தி செய்தார், மறுமுனையில் இவருக்கு இணையாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாண்டியா 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதற்கடுத்து களமிறங்கிய டோனி, கோஹ்லி அடித்து ஆடுவதற்கு அருமையான வாய்ப்பு கொடுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக டோனி 22 ஓட்டங்கள் எடுத்த போது ரன் அவுட் ஆனார்.

இறுதியாக இந்திய அணி 33.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோஹ்லி 84 ஓட்டங்கள் குவித்தார். தன்னுடைய அறிமுக போட்டியிலே 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹார்திக் பாண்டியாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி வரும் 20 ஆம் திகதி நடைபெறுகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

Related posts: