கபடி இறுதிப் போட்டியில் சம்பியன் ஆகியது – அரியாலை ஐக்கியம் மணியந்தோட்டம் அணிகள்!
Friday, February 2nd, 2018
நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் ஒரு அங்கமான ஆண்கள், பெண்களுக்கான கபடிப் போட்டிகள் அரியாலை சரஸ்வதி விளையாட்டுக்கழக மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.
பெண்களுக்கான கபடி இறுதிப் போட்டியில் மணியந்தோட்டம் ஐக்கிய விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் அரியாலை ஐக்கிய அணி, 48:33 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று சம்பியனானது.
ஆண்களுக்கான கபடிப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மணியந்தோட்டம் விளையாட்டுக் கழகம் மோதியது.
இதில் மணியந்தோட்டம் விளையாட்டுக்கழகம் 45:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று சம்பியனாகியது.
Related posts:
|
|
|


