கட்டார் பகிரங்க டென்னிஸ் : முர்ரே காலியுறுதிக்கு முன்னேற்றம்!
Saturday, January 7th, 2017
டோஹா கட்டாரில் நடைபெற்று வரும் கட்டார் பகிரங்க டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரே கடும் போராட்டத்தின் பின்னர் காலியுறுச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் பிரித்தானியா வீரரான ஆன்டி முர்ரே மற்றும் ஒஸ்திரிய வீரரான கிலராட் மெல்சா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் இரு வீரர்களும் தமது திறமைகளை அதி உச்சமாக வெளிப்படுத்தினர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் மோதினர்.
தரவரிசையில் 68வது தரநிலையிலுள்ள ஆன்டி முர்ரேவிற்கு சவால் விடுக்கும் வகையில் விளையாடினார். கடும் போராட்டத்தின் பின்னர் ஆன்டி முர்ரே 7-6, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Related posts:
தேனிக்களால் நிறுத்தப்பட்ட கால்பந்து போட்டி!
மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகினார் ஜொன்டி !
சாத்தியமில்லை என கருதப்படும் விடயங்கள் ரி - 20போட்டிகளில் சாத்தியமானவை- இலங்கை அணிக்கான வெற்றிவாய்ப்...
|
|
|


