ஓய்வு பெறுகிறார் இலங்கை வீரர் ஹெராத்!
Tuesday, October 23rd, 2018
இலங்கை டெஸ்ட் அணியின் இடதுகை பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டம் முடிந்ததும் ஓய்வு பெறவுள்ளார்.
40 வயதான ஹெராத் இலங்கை அணி டெஸ்ட் வரலாற்றில் வெற்றிகரமான பெளலராக கருதப்படுகிறார். 19 வயதில் அறிமுகம் ஆன அவர், தொடர்ந்து முட்டியில் ஏற்பட்ட காயங்களால் அவதிப்பட்டு வந்தார்.
இங்கிலாந்துடன் நடைபெறவுள்ள 3 டெஸ்ட் தொடருக்கு பின் அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலேவில் முதல் டெஸ்ட் முடிந்தவுடன் அவர் ஓய்வு பெறவுள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார். 92 டெஸ்ட் ஆட்டங்களில் 430 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 34 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ள அவர், 9 முறை 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். முரளிதரனுக்கு பின் இலங்கையின் சுழற்பந்து வீச்சை ஹெராத் மேற்கொண்டார்.
Related posts:
சாதி கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள்” ‘தங்கமகன்’ மாரியப்பனின் தாயார் !
பாகிஸ்தானுடன் விளையாட மறுப்பு: இந்திய பெண்கள் அணி மீது ஐ.சி.சி. நடவடிக்கை!
வஹாப் ரியாஸ் இனி அணியில் இல்லை!
|
|
|


