ஐ.பி.எல் தொடர் – மும்பை இண்டியன்ஸ் வெற்றி!

Thursday, April 14th, 2016
9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற 5 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை சேர்த்தது.
கொல்கத்தா அணியில் கவுதம் கம்பீர் அதிகபட்சமாக 52 பந்துகளில் 64 ஓட்டங்களை சேர்த்தார். இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாடியது.
மும்பை அணிக்கு ரோகித் சர்மாவும், பார்த்தீவ் பட்டேலும் சிறப்பான தொடக்கம் தந்தனர். 4.5 ஓவர்களில் அந்த அணி 50 ஓட்டங்களை எட்டியது. 5.5 ஓவர்களில் 53 ஓட்டங்களை எடுத்திருந்த போது பார்த்தீ பட்டேல் ரன் அவுட் ஆகிவெளியேறினார்.

இறுதியில் மும்பை அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. ரோகித் சர்மா 54 பந்துகளில் 84 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர் அணியை தோற்கடித்தது.

Related posts: