ஐ.பி.எல் தொடர்: இறுதி போட்டி இன்று!

12 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று விளையாட உள்ளன.
இந்தப் போட்டி இன்றிரவு 7.30க்கு ஐதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் தலா 3 தடவைகள் ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றுள்ளன.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றுள்ளன.
2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் முன்னதாக இடம்பெற்ற 3 போட்டிகளிலும் மும்பை அணியிடம், சென்னை அணி தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் இன்றைய இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் நான்காவது தடவையாக விளையாட உள்ளன
Related posts:
சர்வதேச மரதன் போட்டியில் இரு இலங்கையர்கள்!
தொடரை இழந்தார் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க!
இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர்?
|
|