ஐரோப்பிய மகளிர் கால்பந்து: டென்மார்க்கிடம் ஜேர்மன் தோல்வி
Wednesday, August 2nd, 2017
நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் ஐரோப்பிய மகளிர் கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில் டென்மார்க்கை எதிர்கொண்ட ஜேர்மனி, அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.
இந்த போட்டியில் ஆறுமுறை சம்பியனான ஜேர்மனி 1-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.அதேபோன்று, மற்றொரு காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
கடந்த 43 ஆண்டுகளில் பிரான்ஸ் அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
“எனது மகன் திறமையானவர் என நினைக்கவில்லை” அசேலவின் பெற்றோர் உருக்கம்!
சொந்த ஊரில் தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடும் திக்வெல்ல!
I.P.L. தொடர்: இறுதிக்கு சென்றது சென்னை!
|
|
|


