ஐந்தாவது முறையாக குயின்ஸ் கிண்ணத்தை வென்றார் முர்ரே

குயின்ஸ் கழகக் கிண்ண சர்வதேச டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 5ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்
குயின்ஸ் கழக கிண்ண சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, கனடா வீரர் மிலோஸ் ரானிச்சை எதிர்கொண்டார்
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 6–-7, 6–-4, 6–-3 என்ற செட் கணக்கில் மிலோஸ் ரானிச்சை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்
இந்த பட்டத்தை ஆன்டி முர்ரே ஏற்கனவே 2009, 2011, 2013, 2015ஆம் ஆண்டுகளில் வென்றிருந்தார். இதன் மூலம் இந்த பட்டத்தை 5ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்
Related posts:
ஒலிம்பிக் போட்டியை நடத்தும் போட்டியிலிருந்து ரோம் விலகுகிறதா?
இலங்கை அணி தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் பங்கேற்பு!
குரேஷியா அணியின் கனவு கலைந்தது - இறுதிப்போட்டிக்கு தெரிவானது ஆர்ஜென்டீனா!
|
|