ஐசிசி பதவியை ராஜினாமா செய்த ரவி சாஸ்திரி!
Saturday, July 2nd, 2016
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐசிசியின் ஊடக பிரநிதி பதவியை ராஜினாமா செய்துள்ளார் ரவி சாஸ்திரி.
குறித்த ஐசிசி நிர்வாக குழு தலைவராக கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கும்ப்ளே நியமிக்கப்பட்டதிற்கும், சாஸ்திரி ராஜினாமாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ரவி சாஸ்திரி முன்னதாகவே தனது ராஜினாமா குறித்து ஐசிசி தலைவர் சஷாங் மனோகரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
53 வயதான சாஸ்திரி,மாற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கவே குறித்த பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், ஐசிசி இணையதளத்தில் சாஸ்திரியின் பெயர் இன்னும் நீக்கப்படவில்லை, விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Related posts:
10ஆண்டுகளின் பின்னர் பெற்ற இரண்டாவது சதம் - உபுல் தரங்க சாதனை!
இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே!
உலக கிண்ண தொடர்: வெறுங்கையுடன் திரும்பும் மெஸ்சி!
|
|
|


