இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே!

Saturday, July 1st, 2017

சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கட் வித்தியாசத்தில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 316 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக குசல் மென்டிஸ் 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.மேலும் , ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இன்றைய தினம் அவர் 1000 ஓட்டங்களை கடந்தார்.தனுஸ்க குணதிலக 60 ஓட்டங்களையும் ஏன்ஜலோ மெத்தீவ்ஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.அசேல குணரட்ன 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 47.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் 322 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.சிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக சோலமொன் மிர் 112 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.பந்துவீச்சில் இலங்கை சார்பாக அசேல குணரட்ண 2 விக்கட்டுக்களையும்  லசித் மாலிங்க மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.மேலும் , சிம்பாப்வே அணி இலங்கை அணியை இலங்கையில் வைத்து வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.அதன்படி, 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் சிம்பாப்வே அணி முன்னிலை வகிக்கிறது

Related posts: