என்னைப் போல் அடிக்க முடியுமா? கிறிஸ் கெயிலுக்கு சவால் விடுத்த சிறுவன்!

Monday, October 17th, 2016

டெல்லியில் பள்ளிகளுக்கான நடந்த டி20 போட்டியில் மயான்க் ராவத் என்ற பள்ளி மாணவன் 77 பந்தில் 279 ஓட்டங்கள் குவித்து கிறிஸ் கெயிலுக்கு சவால் விடும் அளவிற்கு விளையாடியுள்ளார்.

டி20 போட்டியில் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு சொந்தமானவர்கள் என்றால் பலர் கூறுவது மேற்கிந்திய தீவு அணியின் கிறிஸ்கெய்ல், அதற்கு அடுத்த படியாக தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ்.இந்தியாவில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் கெய்ல் 66 பந்தில் 175 ஓட்டங்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதனால் இந்திய அணிக்கு ஒரு கிறிஸ்கெய்ல் கிடைக்க மாட்டாரா என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தற்போது அதை நிரூபிக்கும் வகையில் டெல்லியில் நடந்த பள்ளிகளுக்கான டி20 போட்டியில் டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவன் மயான்க் ராவத் 77 பந்தில் 279 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.இதில் அவர் 14 பவுண்டரிகள் மற்றும் 34 சிக்ஸ்ர்கள் பறக்க விட்டுள்ளார். இதனால் அந்தணி 20 ஓவர் முடிவில் 350 ஓட்டங்கள் குவித்தது. இதை எதிர்த்து விளையாடி எதிரணியினர் 208 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர்.

இப்போட்டியை கண்ட கிரிக்கெட் பிரபலங்கள் சிலர் இவரின் ஆட்டம் மேற்கிந்திய தீவு அணியின் கிறிஸ்கெயிலின் ஆட்டம் போன்று உள்ளது எனவும், இவரைப் போல் கிறிஸ் கெய்ல் அடிக்க முடியுமா என்ற அளவிற்கு கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

gayle_record_2321998f

Related posts: