ஊக்க மருந்து சர்ச்சை : 28 ரஷ்ய வீரர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை ஆரம்பம்!

சர்வதேச ஒலிம்பிக் குழுவானது 2014 ஆம் ஆண்டு சூச்சி குளிர்கால போட்டியில் போட்டியிட்ட 28 ரஷ்ய வீரர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
சூச்சி உள்பட பல போட்டிகளில் ரஷ்யா அரசாங்கம் கட்டுப்படுத்தப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தொடர்பாக சுதந்திரமான அமைப்பின் அறிக்கை ஒன்றை ஆதாரமாகக் கொண்டு இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஊக்க மருந்து தடுப்பு ஆய்வகத்தில் நடு இரவில் ரகசிய சேவை அதிகாரிகளின் உதவியோடு ஊக்க மருந்து கலந்த சிறுநீர் மாதிரிகளுக்குப் பதிலாக சுத்தமான மாதிரிகளை கொண்ட சிறுநீர் மாற்றி வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் அதில் முன்வைக்கப்பட்டது. அந்த மாதிரிகள் தற்போது மீண்டும் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
Related posts:
இந்தியா வெற்றி.. !
பாதுகாப்பு குறித்து ஏமாற்றம் - சம்மி சில்வா !
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141...
|
|