பிரபல கிறிக்கெற் வீரர் மெக்கல்லமுக்கு நடந்தது என்ன? வெளியான உண்மைத் தகவல்!

Monday, December 3rd, 2018

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாதன் மெக்கல்ல இறந்துவிட்டதாக செய்தி பரவிய நிலையில், அவர் நான் நலமுடன் இருப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாதன் மெக்கல்லம், அந்த அணியின் முன்னாள் கேப்டன் ப்ரண்டன் மெக்கல்லமின் மூத்த சகோதரர் ஆவார்.

நாதன், சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

சுழற்பந்துவீச்சாளரான இவர், பின் வரிசையில் பேட்டிங்கிலும் கை கொடுத்துள்ளார். 38 வயதான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில், இன்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவியது. அதில், நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நாதன் மெக்கல்லம்.

இவர், சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இன்று மாலை காலமாகிவிட்டார். இந்தத் தகவலை அவரது மனைவி தெரிவித்துள்ளார் என்ற செய்தி பரவியது.

பல ஊடகங்களில் பிரேக்கிங் செய்தி ஆனது. விக்கிபீடியாவிலும் அவர் இறந்துவிட்டதாகப் பதிவேற்றப்பட்டது. இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் அதிர்ச்சியுடன் தங்கள் இரங்கல் தகவலை தெரிவித்து வந்தனர்.

ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லாததால், அதற்கான காரணம் குறித்து பலரும் தேடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, நாதன் மெக்கல்லமே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் உயிருடன் இருக்கிறேன். முன்பைவிட நன்றாகவே இருக்கிறேன். வெளியாகும் தகவல்கள் உண்மை அல்ல. எங்கிருந்து இந்தச் செய்தி பரவியது எனத் தெரியவில்லை. லவ் யூ ஆல் என்று பதிவிட்டார்.

இதனால், மெக்கல்லம்குறித்துப் பரவிய வதந்திக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. உயிருடன் இருக்கும் நபரை இறந்துவிட்டதாகவும், இதை அவர் மனைவியே தெரிவித்ததாகவும் தகவல் பரப்பியது யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நாதன் மெக்கல்லமின் சகோதரரான ப்ரண்டன் மெக்கல்லம், இதை நான் சும்மா விடப்போவதில்லை, அந்த நபர் யார் என்று கண்டுபிடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Related posts: