உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாடும் அணிகளை 48 ஆக உயர்த்த ஆலோசனை- − பீபா தலைவர்!

Thursday, October 6th, 2016

கால்பந்து உலக கிண்ணப் போட்டிகளில் விளையாடும் அணிகளை 32 இலிருந்து 48 ஆக உயர்த்த சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர், 48 வயதான இன்பாண்டினோ இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் 2017 இல் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற இன்பன்டினோவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாக, கால்பந்து உலக கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகள் அதிகரிப்பு என்பது பிரதானமானதாகும். கிரிக்கெட் உலக கிண்ணப் போட்டிகளில் பின்பற்றப்படும் தெரிவு நிலை,பிரதான குழுநிலை என்கின்ற அடிப்படையில் போட்டிகள் இருக்கும் என்று கருதப்படுகின்றது.

32 அணிகள் வெளியேற்றும் போட்டிகள்(Knockout) அடிப்படையில் விளையாடி, அதிலே வெற்றிபெறும் 16 அணிகள், மற்றைய 16 அணிகளுடனான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

804bcolreceived_10210610963259820-300x169152444490_4847343_05102016_aff_cmy

Related posts: