உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்!

Friday, October 20th, 2017

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தே உலகின் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என தெரியவந்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியின் தற்போதைய அணித்தலைவராக உள்ளார். இவர் ஆண்டிற்கு 1.4 மில்லியன் டொலரை ஊதியமாக பெறுகிறார். இது ஜிம்பாப்வே அணித் தலைவர் கிரேம் கிரீமரை விட இருபது மடங்கு அதிகமாகும்.

கிரீமர் வெறும் 86,00,000 டொலர்களை மட்டுமே ஆண்டு ஊதியமாக பெறுவதால் இவரே உலகின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் அணித்தலைவர் ஆவார்.இந்திய அணியின் தற்போதைய அணித் தலைவர் விராட் கோஹ்லி தலா ஒரு மில்லியன் டொலர்களையும், பிரித்தானிய வீரர் ஜோ ரூட் 1.38 மில்லியன் டொலர்களையும் ஆண்டு வருமானமாக பெறுகின்றனர்.பயிற்சியாளர்களில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே அதிக ஊதியம் பெறுபவர் ஆவார், இவரின் ஆண்டு ஊதியம் 1.17 மில்லியன் டொலர்களாகும்.

Related posts: