உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் சாதனை படைத்தார் தர்ஜினி!
Tuesday, July 23rd, 2019
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார்.
இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் பங்கு பெற்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
வலைப்பந்தாட்டத் தொடர் ஒன்றில் 348 கோல்களை போட்டு, தர்ஜினி சிவலிங்கம் இந்த சாதனையை படைத்துள்ளார்.
375 முயற்சிகளில், 348 கோல்களை தர்ஜினி சிவலிங்கம் போட்டுள்ளார்.
ஜமைக்காவை சேர்ந்த ஜானியேல் ஃபோலர் வலைப்பந்தாட்ட தொடர் ஒன்றில் 304 கோல்களை போட்டு முன்னிலை வகித்த சாதனையை தர்ஜினி சிவலிங்கம் முறியடித்துள்ளார்.
Related posts:
தொடரை முழுமையாக வென்றது இந்தியா !
ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் தொடர் : இலங்கை அணி சீனா பயணம்!
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி போட்டி!
|
|
|


