உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடர் – அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!
Sunday, October 23rd, 2022
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 89 ஓட்டங்களால் இலகுவான வெற்றியை பதிவு செய்தது.
அவுஸ்திரேலிய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி சிட்னியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது.
அதன்படி, இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 201 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 17.01 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
Related posts:
நாளை ஆரம்பமாகும் கிரிக்கெற் சம்பியன் கிண்ண தொடர்!
சகல துறைப் போட்டிகளுக்கும் தலைவர் நியமனம்
கோஹ்லிக்கு டோனி வைத்துள்ள செல்லப்பெயர்!
|
|
|


