உபுல் தரங்க விளையாடுவதற்கு தடை!
Monday, June 5th, 2017
இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்கவிற்கு சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று தென் ஆப்ரிக்க அணியுடன் இடம்பெற்ற போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நேற்றைய போட்டியின் போது இலங்கை அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு 4 மணித்தியாலங்கள் எடுத்துள்ளமை இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் காயமடைந்துள்ளமையின் காரணமாக உப்புல் தரங்க தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் விடோரிக்கு ஓராண்டு தடை!
கோஹ்லி ஒரு சாட்டை !
எதிர்வரும் டி 20 உலகக் கோப்பையில் விளையாடும் மலிங்கா!
|
|
|


