ஈட்டி எறிதல் போட்டியில் சென்.பற்றிக்ஸ் வென்றது தங்கம்!
Wednesday, July 11th, 2018
வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இந்தப் போட்டிகள் இடம்பெற்றன. 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.அரவிந்த் 53.71 மீற்றர் தூரத்துக்கு எறிந்து தங்கப்பதக்கத்தையும், வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஐ.றேகன் 49.72 மீற்றர் தூரத்துக்கு எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும், நெல்லியடி மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த வி.மதுரன் 46.87 மீற்றர் தூரத்துக்கு எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
Related posts:
அப்ரிடியுடன் கைகோர்க்கும் சங்கக்காரா!
இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய தென்ஆப்பிரிக்கா!
இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் நடால் ஷரபோவா!
|
|
|


