இலங்கை வரும் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி!
Wednesday, May 10th, 2023
இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் போட்டித் தொடருக்கான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது.
3 போட்டிகள் கொண்ட இப்போட்டியில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜூன் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இரண்டாவது போட்டி ஜூன் 4 ஆம் திகதியும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.குறித்த 3 போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டித் தொடரில் கலந்து கொள்ளும் ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயிற்சியாளர் பதவிக்கு ஆசைப்பட்ட கில்லெஸ்பி!
பட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம்!
உலக சம்பியனை வீழ்த்தி வெற்றிபெற்ற சுவிட்ஸர்லாந்து! - சுவிஸ் மக்கள் கொண்டாட்டம்!
|
|
|


