இலங்கை வந்துள்ள பிரபல கிரிக்கட் வீரர் மருத்துவமனையில்
Friday, July 7th, 2017
இலங்கை அணி மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையில் 3 வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் சிம்பாபே அணி வீரர் Ryan Ponsonby Burl மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹோட்டலில் அவர் உணவு உண்டுள்ள போது, உணவு விஷமாகியுள்ள நிலையில் ஹம்பாந்தொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் குறித்த வீரருக்கு உயிர் ஆபத்து இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.குறித்த வீரர் கடந்த போட்டிகளில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.காலியில் இடம்பெற்ற 2 வது போட்டியில் இலங்கை அணி வீரர் சந்தகேன் வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார்
Related posts:
சொந்த கிரிக்கெட் வாரியத்தை விட இந்திய கிரிக்கெட் வாரியம் நல்லது : பிராவோ
இலங்கை ரசிகர்கள் பேராதரவு: சுதந்திர கிண்ணத்தை வென்றது இந்தியா!
வலைப்பந்தாட்டத் தொடரில் வரணி மத்தி சம்பியனானது!
|
|
|


