இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு I.C.C யால் அபராதம்!
Wednesday, July 3rd, 2019
உலகக் கிண்ண தொடரின் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மெதுவாக பந்து வீசிய குற்றச்சாட்டில் இரு அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் சபையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த அணிகளுக்கு வழங்கிய காலத்தினை விடவும் அதிகமான காலத்தினை பந்துவீச்சில் செலவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அணியின் தலைவர்கள் இருவரதும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 40% அபராதப்பணமும் அணியின் வீரர்களது போட்டிக் கட்டணத்தில் 20% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திமுத் கருணாரத்னா மற்றும் ஹோல்டர் ஆகியோர் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் மெதுவாக பந்து வீசிய குற்றச்சாட்டில் சிக்கினால் போட்டித் தடை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரவீராங்கணைகளுடன் 46 அதிகாரிகள் சென்றமை தொடர்பில் விசாரணை!
நேருக்கு நேர் மோதி விபத்து: கால்பந்து போட்டியில் பரிதபமாக உயிரிழந்த வீரர்!
யாழ்ப்பாணம் சுப்பர் லீக்கின் முதலாவது பருவகாலப் போட்டிகள் ஆரம்பம்!
|
|
|


