இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆரம்பம்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில்துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதுவரை இரண்டு அணிகளுக்கிடையே 18 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில் இலங்கை அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றுள்ளது.
இருப்பினும் இறுதியாக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருந்தது. மேலும் டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி 6ஆவது இடத்திலும் பங்களாதேஷ் அணி 9ஆவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
டிமிட்ரோவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்!
அவுஸ்திரேலிய ஜாம்பவானுக்கு ஓர் ஆண்டு தடை!
தினேஷ் சந்திமால் 13 ஆவது டெஸ்ட் சதம்!
|
|