அவுஸ்திரேலிய ஜாம்பவானுக்கு ஓர் ஆண்டு தடை!

Wednesday, September 25th, 2019


அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே, அதிவேகத்தில் காரை ஓட்டிய வழக்கில் சிக்கியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னே. இவர் டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வார்னே, அவ்வப்போது வர்ணனை செய்து வருகிறார். தற்போது லண்டனில் வசித்து வரும் இவர், அதிவேகமாக கார் ஓட்டியதாக பொலிசில் பிடிபட்டார்.

குறிப்பிட்ட அளவு வேகத்தை விட அதிகமான வேகத்தில் காரை ஓட்டியதால், பொலிசிடம் பிடிபட்ட வார்னே மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஷேன் வார்னேவுக்கு ஓர் ஆண்டு காலம் வாகனம் ஓட்ட தடை விதித்தார். அத்துடன் அவருக்கு 1,845 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஏற்கனவே, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வேக கட்டுப்பாட்டு விதியை மீறிய வார்னே, அப்போதிலிருந்து இதுவரை 6 முறை விதியை மீறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: