இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை பூஜா லியனகே விபத்தில் பலி!
Tuesday, June 16th, 2020
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை பூஜா லியனகே, குருநாகல் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் – கட்டுபொத பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றின் போதே அவர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இலங்கை அணிக்காக எந்தவொரு போட்டியிலும் விளையாடாத போதிலும், இலங்கை கிரிக்கெட் அணி குழாமில் தொடர்ந்தும் சேர்க்கப்பட்டு வந்துள்ளார். அத்துடன், பூஜா லியனகே உள்நாட்டு கிரிக்கெட் சுற்று மற்றும் மாகாண பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு மூத்த வீரராக இருந்துள்ளார்.
பூஜா லியனகே உயிரிழந்தமையை இலங்கையில் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சசிகலா சிறிவர்தன கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நியூசிலாந்தை மிரட்டிய வங்கதேசம்!
கிளிநொச்சி வீரர் ரஜீவன் தங்கப்பதக்கம் வென்றார்
அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறையை மாற்றும் பயிற்சி ஆரம்பம்!
|
|
|


