இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் சதி !
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கட் தொடரை இலக்கு வைத்து ஆட்டநிர்ணய சதி முயற்சி இடம்பெற்றுள்ளது.
இதற்காக டுபாயில் உள்ள சூதாட்டக்காரர் ஒருவர் தம்மை அணுகியதாக பாகிஸ்தான் அணித் தலைவர் சஃராஸ் அஹமட் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் பாகிஸ்தான் கிரிக்கட் சபைக்கும் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கும் அறிவித்துள்ளார்.
சஃப்ராஸ் அஹமட்டின் இந்த செயற்பாடானது அனைத்து கிரிக்கட் வீரர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.பாகிஸ்தான் 4க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோல் மழையுடன் வெற்றிக் கணக்கை தொடங்கியது ஊரெழு றோயல் அணி!
சொந்த மண்ணில் இலங்கையை தடுமாறச் செய்த வங்கதேச வீரர்கள்!
புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!
|
|
|


