இலங்கை திரும்பினார் திரிமன்னே!
Tuesday, June 28th, 2016
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே காயம் காரணமாக விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திரிமன்னே இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் சொல்லிக் கொள்ளும் அளவு சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் அவர் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இடம் பெற்றார். ஆனால் முடிந்த 3 போட்டிகளிலும் ஆடும் லெவனில் அவர் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் திரிமன்னே காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக விக்கெட் கீப்பரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டில்வெல்ல அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டும் ஆடியுள்ள டில்வெல்ல 4 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
ஏற்கனவே தமிங்க பிரசாத், துஷ்மந்த சமீரா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், தற்போது திரிமன்னேவும் விலகியுள்ளார்
Related posts:
|
|
|


