இலங்கை டி20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிது ஹசரங்கவை நியமிப்பது தொடர்பில் தெரிவுக்குழு கவனம் !
Saturday, December 16th, 2023
இலங்கை டி20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிது ஹசரங்கவை நியமிப்பது தொடர்பில் தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் பதவியை திமுத் கருணாரட்னத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
எவ்வாறாயினும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவி தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று ஒருநாள் அணியின் தலைவராக தொடர்ந்து தசுன் ஷானகவை செயல்பட அனுமதிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முத்தரப்பு ஒருநாள் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது அவுஸ்திரேலியா!
தென்னாபிரிக்க பிரிமியர் லீக் தொடரல் மாலிங்க!
20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டை சதம் !
|
|
|


