இலங்கை ஜோடியின் 14 வருடத்திற்குப் பின்னரான சாதனை!

Sunday, February 4th, 2018

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இடம்பெற்றது.

இதில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றை ஆட்ட நேர முடிவு வரையில் 3 விக்கட்டுக்களை இழந்து503 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 196 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா  173 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்டகொங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில் மூன்றாம் நாளான இன்று ஒரு விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களுடன் இலங்கை முதல்இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

தனஞ்சய டி சில்வா 104 ஓட்டங்களுடனும் குசல் மென்டிஸ் 83 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இவர்கள் மேலும் 121 ஓட்டங்களைப்பகிர்ந்ததுடன் இரண்டாம் விக்கெட்டில் மொத்தமாக 308 ஓட்டங்கள் பகிரப்பட்டன.

இது 14 ஆண்டுகளின் பின்னர் இலங்கை ஜோடி பதிவு செய்த மூன்றாவது அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.

தனது இரண்டாவது டெஸ்ட் அரைச்சதத்தை எட்டிய ரொஷேன் சில்வா 87 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களுடனும்ஆட்டமிழக்காதுள்ளனர். அத்துடன் 90 ஓவர்கள் வீசப்பட்டதுடன் அதில் இலங்கை 317 ஓட்டங்களைப் பெற பங்களாதேஷ் அணியால் 2 விக்கெட்களைமாத்திரமே வீழ்த்தமுடிந்தது.

முதலாவதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: