இந்திய டெஸ்ட் அணியில் ஆறாம் நிலை யாருக்கு?

Sunday, December 31st, 2017

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பதினொருவரை தெரிவுசெய்வதில் அணி நிர்வாகம் சில சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது.

இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பிட்டிருந்த சகலதுறை வீரர் ஹர்த்திக் பாண்டிய மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளதால், அவரின் இடத்தில் 6வது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் இணைக்கப்படுவாரா? இலங்கை அணிக்கெதிரான தொடரில் இந்திய அணி 4 பந்து வீச்சாளர்கள் மற்றும் 6 துடுப்பாட்ட வீரர்களுடன் களமிறங்கியது. இந்த மாற்றம் அணிக்கும் ஏற்றதாக அமைந்திருந்தது.

எனினும் தென்னாபிரிக்க மண்ணை பொருத்தவரையில் இந்திய அணி துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்த எதிர்பார்க்கும். இதனால் 6 துடுப்பாட்ட வீரர்களை களமிறக்கும். இதனால் அணியில் 4 பிரதான பந்து வீச்சாளர்களை இந்திய அணி களமிறக்க எண்ணும்.

4 பந்து வீச்சாளர்களில் ஜடேஜா அல்லது அஸ்வின் ஆகியவர்களில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தெரிவுசெய்யப்படும் அதேவேளை, வேகப்பந்து வீச்சுக்காக மொஹமட் ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோரில் மூவர் அணியில் இணைக்கப்படுவர்.

இதனால் பாண்டியாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. எவ்வாறாயினும் அணிக்குள் தெரிவாகுவதில் பாண்டியா மற்றும ரோஹித் சர்மாவுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மித வேகப்பந்து வீச்சாளராகவும், துடுப்பெடுத்தாடக்கூடியவருமான பாண்டியாவுக்கு வாய்ப்பு அதிகம் இருகின்ற போதும், துடுப்பாட்ட வரிசையை வலுப்படுத்தவே இந்திய அணி தேர்வுக்குழு எதிர்பார்க்கும் என நம்பப்படுகின்றது.

Related posts: